
பப்பாளிப்பழத்தில் வைட்டமின் ஏ,பி,சி, ரிபோஃப்ளோவின், கால்சியம், இரும்பு சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் மக்னீசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.
பப்பாளி பழத்தில் பல சத்துதுக்கள் உள்ளதோடு பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகளை சரி செய்து பல நன்மைகள் செய்கிறது.
பப்பாளிப்பழம் அனைத்து பருவ காலங்களிலும் மிக எளிதாக கிடைக்கக்கூடிய பழம் ஆகும்.
பப்பாளி பழமானது மஞ்சள் ,பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கக்கூடியது.சிவப்பு நிறமுடைய பழம் மிகவும் சுவையாக இருக்கும்.
செரிமானம் சார்ந்த பிரச்சனைகளான அஜீரணம், நெஞ்செரிச்சல்,வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் அவதிப்படுபவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டு வர மிகவும் நல்லது.அனைத்து விதமான நோய் குணமாகும்.
பப்பாளிப்பழத்தில் செரிமானத்திற்கு தேவையான அதிகப்படியான நார்சத்துகளும் உள்ளது.பாரர்ப்பேன் என்று சொல்லக்கூடிய ஒரு வகை என்சைம் இந்த பழத்தில் அடங்கியள்ளது.
இது சாப்பிடும் உணவுகள் எளிதில் ஜீரணம் ஆவதற்கு உதவி செய்யும் மற்றும் செரிமானம் சார்ந்த பிரச்சனைகளையும் மிக எளிதாக குணமாக்கும்.
பப்பாளி பழத்தை சாப்பிடுவதால் முதுமை என்பது வராது.
பப்பாளி பழத்தை முகத்தில் தடவி வருவதால் முகசுருக்கம் ஏற்படாது.
பப்பாளிப்பழத்தில் நார் சத்துக்களும், இருதய துடிப்பை சீராக்கும் பொட்டாசியம் சத்துக்களும் இருக்கிறது.
உடலில் உள்ள அனைத்து நரம்புகள் வலுவாகவும் இறுக்கத்தன்மை ஏற்ப்படாமல் இருக்கவும் பப்பாளியில் உள்ள பொட்டாசியம் பயன்படுகிறது தொடர்ந்து பப்பாளிப்பழத்தை சாப்பிட்டு வரும்போது இருதயத்தில் கொழுப்பு படிவதையும் தடுக்கும்.